Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.525.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

தெய்வத் திருவுரு.

5

ஆற்றல் மிகக்காட்ட ஆண்டவர் செய்யுருவி

லேற்றினார் யோக இசை.

525

குறள் விளக்கம்.

சிற்ப முறைக்கொப்ப தெய்வ வடிவங்களை ஆக்கி, அவற்றிற்குத் தமது ஒருமை மனத்திற் கொண்ட யோக சக்தியையும், வழங்கிப் பெற்று விளங்கச் செய்தார்கள் வல்லவர்கள். இந்த யோக ஞான சக்தி மட்டுமல்ல எல்லாம் வல்ல கடவுட் சக்தி.

ஆகையால், கடவுளின் ஏகதேசச் சக்தியே இவ்வளவு ;பெருமை கொண்டதெனின், பூர்ணதயா பெருஞ் சக்தி எத்தன்மைத்தோ என்று நினைந்து நினைந்து சுத்த தயா நெறியில் சூழ வேண்டியுள்ளோம் நாம்.

P Sujatha
கருணைமிகு சுவாமிகளுக்கு,
வணக்கம்.வல்லவர்கள் ஆகிய முற்கால பெரியவர்கள் மன ஒருமையினால் திரு உருவங்களில் புறமாக இறைவனை கண்டார்கள்.ஆனால் இன்று சுத்த சன்மார்க்கம் எனும் தயவு மார்க்கம் ராமலிங்கர் எனும் ஆத்மாவின் மூலம் வெளிபட்டு விட்டது.எனவே சன்மார்க்கத்தில் எதனையும் அகம்,புறம் என வேறு படுத்த வேண்டியதில்லை.எல்லாம் தயவு வண்ணமாக காண கருணை எனும் தயவு போதும்.எனவே,தெய்வ திரு உருவங்களை பழங்கால சின்னங்களாக,தத்துவங்களாக கொள்ள வேண்டும்.உண்மை தயவு அருள்ஜோதியை கண்டு நினைத்து உணரும் உரிமையில் இன்று நாம் இருப்பதால் உண்மை மெய் பொருளை நினைத்து உணர்வோம்.அகம்,புறம் எதனையும் பிரித்து சொல்ல வேண்டியதில்லை.எனினும் உண்மையை உணரவே பிரித்து சொல்ல வேண்டி உள்ளது.எல்லாம் ஒருமையாய் காண தயவு எனும் அனக வாழ்வு வேண்டும்.எதனையும் கருணையில் அறிவும்,அன்பும் கலந்த தயவு பார்வையில் காண வேண்டுவது அவசியம்.உயிர் பலி,சடங்கு,தேவை இல்லாத வழக்கங்களை தயவு மார்க்கம் விரும்பாது.தயவு மார்க்கம் ஆத்ம ஒருமையில் காண்பது..சுவாமிகளுக்கு தயவு.
Friday, July 2, 2010 at 22:41 pm by P Sujatha