தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
தெய்வத் திருவுரு.
|
3 |
விசாரத் துளவாகு மெய்ஞ்ஞான தோற்ற அசாத்திய ரூப மது. |
523 |
குறள் விளக்கம்.
தெய்வத் திருவுருவங்கள் சாதாரண மனித வடிவங்கள் போல இல்லாது. சிற்பகலா லட்சணத்தோடு விளங்குவனவாம். இவை, சத்விசார உண்மை விளக்க வந்தவை ஆதலின், உருவத் தோற்றத்தில் இயற்கைக்கு மாறுபட சிற்சில அங்க அவயங்கள் அமைக்கப்படுகின்றன.
ஆகவே, சத்விசாரத்தினால் சிறிய மூர்த்திகளின் பெரிய கீர்த்தியை உணர்ந்து பற்றிடல் வேண்டுமே யல்லாது, உண்மை விசாரமில்லாது ரூப செளந்தர்யத்தில் பற்று வைத்து மயங்கிப் போதல் கூடாது.
திண்டுக்கல் அன்பர்கள் சுவாமிகளின் நல்ல தயவு குறள்களை விளக்கத்துடன்
வெளி இட்டு வருகிறார்கள்.ராமனுஜம் அய்யா என்ற தனி நபரை குறிப்பிட தேவை இல்லை.அக வாழ்வுக்கு புற வாழ்வு துணையாக அமையும்.சிறு குழந்தைகள் முதலில் தாயை தான் அறியும்.பின் அப்பாவை அறியும்.பின்பு அவர்களால் பிற சமூக உறவு நபர்களை அறியும்.இவர்கள் எல்லோரும் அந்த சிறு குழந்தை வளர வளர தெரிந்தும்,தெரியாமலும் மேலான கடவுளை பற்றி சொல்லி கொடுக்கிறார்கள்.
புறமும் வேண்டும்.அகமும் வேண்டும்.எல்லோருக்கும் கடவுள் முதலில் திரு உருவங்களில் தெரியும். பிறகு அக உணர்வில் ஜோதியில் கடவுளை காண்பார்கள்