Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.522.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

தெய்வத் திருவுரு.

2

ஈகையாந் தன்மை யிருகரத்தின் மேற்காட்டும்

வாகையேர் பற்கை வழக்கு.

522

குறள் விளக்கம்.

உள்ளத்தில் சுரக்கும் தயவு புறத்தில் செயல்படும்போது ஈகையாகி இரு கரங்களால் உதவ நேருகின்றது. தெய்வத் திருவுருவங்களோ தயவு நிரம்ப உடையவை என்னும் தத்துவ விளக்கத்தின் பொருட்டு, இரண்டிற்கு மேற்பட்ட கரங்களுடன் தயவும் ஆற்றல் மிகுதியும் காட்ட அமைக்கப்பட்டுள்ளனவாம்.

வாகை = வெற்றி, வலிமை, அழகு.

பற்கை = பல கைகள்

வழக்கு = வழக்கம்.

ஈகை விளங்கும் செயலால் தயா வெற்றி உண்டாவதால் தெய்வத் திருவுருவங்களுக்கு வாகை ஏர் பலகைகள் வழங்கப்பட்டுள்ளனவாம்.