தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்திரண்டாம் அதிகாரம்
தெய்வாலய விசாரம்.
|
8. |
தமிழுந் தமிழர் தனியுங் கடவுள் அமிழுத தத்துவமு மன்பு. |
518 |
குறள் விளக்கம்.
அமிழுதம் = அமிர்தம். இறவாமை நல்கும் பொருள். சச்சிதானந்தக் கடவுள் தன்மையுடையது. எனவே, நமது கடவுள் சுத்த அன்பு வடிவினர் என்றும், அமிர்த தத்துவம் என்று அறிந்து கொண்டார்கள் நம் முன்னோர்கள். இக்கடவுள் உண்மையைத்தான் அடிப்படையாகக் கொண்டு நம் தமிழ் மொழியையும் சிற்ப கலா விளக்க தெய்வ ஆலயங்களையும் ஆக்கித் தந்துள்ளனர். ஆகவே நம் தமிழ் இனத்திற்குக் கடவுள் விசாரம் செய்து அடைய நமது கோயில்களும், மொழியும் பெரும் துணை புரிகின்றன. எளிதின் கடவுள் ஞானம் பெறுவது நமக்கே உரிமையாம்.
Write a comment