தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்திரண்டாம் அதிகாரம்
தெய்வாலய விசாரம்.
|
2. |
ஆன்மா லயத்திருக்கும் ஆண்டவ ருண்மையைத் தான்காட்டும் ஞானத் தளி |
512 |
குறள் விளக்கம்.
சுத்த சன்மார்க்க உண்மையைத் தெரிவிக்க வந்த கோயில் சத்திய ஞான சபை ஆகும். இவ்வாலயம், ஆண்டவருடைய அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை இயல் உண்மைத் தத்துவத்தை உள்ளவாறு உணர்த்த வந்ததாம். இதுவே, நம் ஆன்மாவையும் அதில் ஒளிரும் கடவுட் சக்தியையும் குறிக்கின்றதாம்.
நமது ஆன்மாவே பசு எனப்படும். இந்த ஆன்மப் பசுவில், பதியும் கலந்துள்ளார். அப்பதி, அகரம் என்ற முதல் எழுத்தாலும், அ-ன் என்னும் ஆதி அந்த எழுத்துக்களாலும் குறிக்கப்படும். இதனால்தான், ஆ, ஆன் என்னும் சொற்கள் பசு என்ற பொருள் வழங்கி தம் அகத்தே (அ+அ=ஆ) (அ+அ+ன்=ஆன்) பதி உண்மையைப் புலப்படுத்துகின்றன. இப்படி ஆ-வாகிய ஆன்மப் பசுவில், அகரபதி ஒடுங்கிக் கிடக்கின்ற உண்மையை உணர்த்தவே இவ்வான்மா ஆலயமாகக் கூறப்படுவதாம்.