தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தோராம் அதிகாரம்.
தெய்வ நூற் சாரம்.
|
9. |
கோடிநூற் கற்றாலுங் கூடுமோ மெய்யருள் நாடிதயா ஜோதி நடு. |
509 |
குறள் விளக்கம்.
எண்ணிறந்த புத்தகப் படிப்பாலும், கேள்வி ஞான விசாரத்தாலும் அறிந்து கொள்வதற்கு அரியது அருள் அனுபவம். அப்படிப்பட்ட மெய்யருள் அனுபவத்தைப் பெற வேண்டுமானால் அக ஓர்மையோடு தயவால் ஆன்ம நெகிழ்ச்சி உண்டாதல் வேண்டும். இந்த அக ஒருமையும் அனக தயவுமே அருள் அனுபவமாக மலர்ந்து மணக்கும்.
ஆதலின், எல்லா தெய்வ நூல்களின் சாராம்சமும் ஆகிய மெய்ப்பொருள் நமது அகத்திலே விளங்கிக் கொண்டுள்ள ஒன்றே ஆகும் எனக்கண்டு, அருளாலே அடைவோமாக.
Write a comment