Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.508.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தோராம் அதிகாரம்.

தெய்வ நூற் சாரம்.

8.

சுத்ததய வானன்றி சொல்லுசடாந் தப்பொருளின்

சத்தினையார் பெற்றார் தனித்து.

508

குறள் விளக்கம்.

வேதாந்தம், சித்தாந்தம் இவற்றில் அடங்கும் யோகாந்தம், போதாந்தமும், நாதாந்தம், கலாந்தமும் ஆகிய ஆறு அந்தங்களின் முடிவாய் அதீதமாய் விளங்கும் சத்தாகிய மெய்ப் பொருளை எந்த முயற்சியால், எவர் பெற்றார் இவ்வுலகில் ?

சுத்த சன்மார்க்கத்தால் அன்றி பிறிது எதனாலும் ஷடாந்தப் பொருளாம் சத்திய ஞான ஆனந்த அனுபவம் பெற முடியாது என்பது கருத்து.