தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தோராம் அதிகாரம்.
தெய்வ நூற் சாரம்.
|
7. |
கல்லெல்லாந் தெய்வக் கருணையுரு வாகாவாங் கில்லாகும் பன்னூற் கிசை. |
507 |
குறள் விளக்கம்.
உலகில் எத்தனையோ கற்கள் இருக்கின்றன. அவைகள் யாவும் கருணை வளர்க்கும் கடவுள் திருவுருவங்கள் ஆகிவிடுமா ? ஆகாது. அதுபோல் உலகில் உரைக்கப்பட்டு விளங்குகின்ற பலவாகிய நூல்களும் புகழ்பெற்று வயங்கி இறையின்பப் பெரும்பயனை வழங்கி விடாவாம்.
துதித்தற்குரிய தெய்வ சிற்பத் திருவுருவும், ஓதற்குரிய அருள் ஞான நூலும், அன்பையும் அறிவையும் பெருக்கி கடவுள் நிலை எய்தச் செய்யும்.