Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.504.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தோராம் அதிகாரம்.

தெய்வ நூற் சாரம்.

4

கடவுளியல் கண்ட கருணைவளர் சித்தர்

படைத்தநூற் காம்மெய்ப் பயன்.

504

குறள் விளக்கம்.

அக உணர்விலே கடவுட் தன்மையைக் கண்ட பெரியோர்கள், அக்காட்சி அனுபவத்தை பிறரும் காணக் கருதி தெய்வத் தமிழை இயற்றினார்கள். ஆதலின், அத்தமிழ் கொண்டு அருள் விளக்க நூல் செய்து அவற்றில் கடவுட் சாரத்தை பொதிந்து வைத்துள்ளார்கள். எனவே கருணைத் தமிழ் துணை கொண்டு சத்விசாரம் செய்தால் மிக எளிதில் பதி உண்மையை கண்டு கொள்ளலாம்.