தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பதாம் அதிகாரம்.
அகக் கல்வி நிலையம்.
|
7. |
ஆன்மா ணவற்கு அகில வுலகுபொருள் நூன்மா நிலையமா நோக்கு. |
497 |
ஆன்மானுபவம் பெறத் தகுந்த மாணவனுக்கு, அவ்வான்ம ஆலயமே, புத்தகாலயமாக, கலாநிலையமாக உள்ளதாம். அவன் ஓதும் நூலோ அகில உலக உயிர்ப் பொருள்களேயாம்.
நூன்மா நிலையமா நோக்கு = மா நூல் நிலையமாகக் கண்டு கொள்க.
பிரணவமாகிய அருள் இயற்கையை உணர்ந்து, ஆன்ம வடிவம் தன் உருவாய் நிற்கும் ஒருவனே இங்கு குறிக்கப்படும் மாணவன். அகக் கல்வி நிலையத்தில் இருந்து கற்கும் இம்மாணவனுக்கு புறத்துள்ள உலகப் பிரபஞ்சம் முற்றுமே பெருநூல் நிலையமாக உள்ளதாம்.
Write a comment