தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
ஐம்பதாம் அதிகாரம்.
அகக் கல்வி நிலையம்.
|
1. |
தயவறி வோங்கத் தளியிடத் துற்று கவறு ஆன்மகலை கல். |
491 |
குறள் விளக்கம்.
சத்விசாரத்தால் அண்ட, பிண்ட இரகசியங்களையெல்லாம் நன்கு கற்று அறிதற்கு உரிய கல்வி நிலையம் அகத்தேயுள்ளதால் அதனைக் கூறவந்த இவ்வதிகாரம், அண்ட பிண்ட விசாரத்தின் பின் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளமற்ற உள்ளத்தில் தயவு அறிவு ஊறி வெள்ளமாகப் பெருக அகக்கல்வி நிலையமாகிய ஆன்மக் கோயிலில் சேர்ந்து கற்றல் வேண்டும். சத்விசார ஞானம் பெற எல்லோருக்கும் உரியதும், அருள் நன் முயற்சியே அல்லாது பெரும் பொருளும் வீண் முயற்சியும் வேண்டப்படாததுமான சர்வகலாசாலை அன்று, சர்வ கலா சாலை என்பது நம் ஆன்மாலயமே.
உலகியல் கல்வி நிலையங்களிலும். ஆன்மக் கல்வியே குறிக்கோளாகக் கொண்டு தயா இயல் தழைக்கக் கற்பித்தால், உலகிற்கே பெருநன்மை உண்டாகும்.
தளி = கோயில், கயவு = களவு, வெறுப்பு.