Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.490.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தொன்பதாம் அதிகாரம்

அண்ட பிண்ட விசாரம்.



10.

பிரணவருட் பிண்டான்மா பேரண்டங் காணுங்

கரணவிழி காணாக் கவின்.

490

குறள் விளக்கம்.

அருட் பிரணவ சக்தி விளங்கும் ஆன்மாவுக்கே அகண்டாண்ட உண்மை எல்லாம் வெளிப்படும். கண்ணாலும், கருவிகளைக் கொண்டும், மனோகரண உதவியாலும், பேரண்டக் காட்சியின் உண்மையை கண்டு கொள்ள முடியாது.

ஆன்ம இயற்கை அருட்சக்தியே உண்மை காணும் அனுபவ ஞானக் கண்ணாய் உள்ளது. சத்விசாரத்தால் இக்கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொள்ளுதல் உண்மையைக் கண்டு உய்யும் வழியாம்.