தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.
|
9. |
ஊண்பிண்டத் தாம்பிண்டத் தொட்டா தகவானில் ஏண்கொண் டருளா லெழிலு. |
489 |
குறள் விளக்கம்.
ஊண் பிண்டத்தாம் பிண்டம் என்றது, சோற்று உருண்டையால் உருவாகிப் பெருத்தது இத்தூல தேகம் என்பதாம். பிடிப்பிடியாக உண்ட ஆகாரத்தால் படிப்படியாக வளர்ந்தது இப்பிண்ட தேகம் என்ப. அன்னத்தால் ஆகிய இவ்வுடம்பு சத்விசாரம் உண்டாகாதவரை விடாது பற்றி வளரும்.
ஆதலின், அவ்விசாரத்தால் ஆண்ட பிண்ட உண்மையை அறிந்து, ஆன்மாவாகிய அகவானில் பொருந்தி அருள் உணர்வு ஓங்கப் பிண்ட தேகம் பற்றாது பிறங்க, அழியாத தயவாம் அக அழகு அல்லது மன்னெழில் கொண்டு விளங்கலாகும். ஆன்மா அண்டனோடு அண்டி வாழற்கு ஆனதே இவ்விசாரமுறை.
ஏண் = பெருமை, உயர்ச்சி, வன்மை.
Write a comment