தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.
|
8. |
பிண்டான்மா விற்குட் பெயரா தொருவடியொன் றண்டமெலாங் கொண்ட வடி. |
488 |
குறள் விளக்கம்.
நமது ஆன்மாவுக்கு அகத்தே நிலைத்திருந்து ஆள்கின்ற கடவுட் சக்தியே, அவ்வாண்டவருடைய ஊன்றிய திருவடி எனப்படும். அதற்கு இணையான சக்தித் திருவடி ஒன்றே புறப் பிரபஞ்சம் எங்கணும் நிறைந்து இயங்கி, ஆக்கலாதி முத்தொழில் நடனம் புரிகின்றதாம்.
“உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலை மெய்யின்பம் உறுகின்ற வெளிநிலை என்று உபய நிலையாகி இலகிய நின் சேவடிகள்…..”
என்னும் திருவருட்பா அடிகளால் நம் பதியின் இரு திருவடிகளின் உண்மை நன்கு தெளியலாகும்.
Write a comment