தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.
|
6.
|
சிற்றம் பலமாத் திகழான்ம சோதியது
பற்றுமே பேரம் பலம்.
|
486
|
குறள் விளக்கம்.
அருள் ஒளி மயமான ஆன்மாவேதான், சிற்றம்பலமாக, கடவுளின் சிற்றணுக் கோயிலாக உள்ளதாம். இந்த ஆண்டவரது சிற்சோதி சக்தியே எக்காலத்தும் அருட்ஜோதிக் கதிர் வீசிக் கொண்டே இருக்கின்றது. இவ்வருள் ஒளிக்கதிர் (ரசுமி) எவ்வயினும் பெருகிப் பரவி மகாபிரபஞ்சம் முற்றும் நிரம்பித் தன்னாட்சியே புரிந்து கொண்டுள்ளதாம்.
இந்த மகா பிரபஞ்ச அண்ட கடாகப் பெருவெளியே அருட்பெருஞ்சோதிப் பேரம்பலமாகும். நமது சிற்றம்பலத்தரசின் அருள் ஆட்சியே பேரம்பலத்தில் நிறைந்து விளங்குகின்றதாம்.
Write a comment