தயவுக்குறள்.
.
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.
|
5.
|
ஐம்பூதப் பிண்டநிலை அண்டபகோ ளத்துமுள
அம்போ ருகத்தே யறி.
|
485
|
குறள் விளக்கம்.
தூல தேகமாகிய பிண்டத்தில்,
|
கால்
|
ந
|
மண் கூறு நிலை
|
|
வயிறு
|
ம
|
நீரின் கூறு நிலை
|
|
நெஞ்சு
|
சி
|
தீயின் கூறு நிலை
|
|
வாய்
|
வ
|
காற்றின் கூறு நிலை
|
|
கண்
|
ய
|
ஆகாயக் கூறு நிலை
|
வலம், இடம் ஆகிய இருபுறமும் இக்கூறுகள் பொருந்தும். இவற்றிற்கு ஒப்பவே வான வட்டத்தும் சூரியன், சந்திரனுக்கு உரிய வலம் இடம் உள்ள இடங்களும் ஐம்பூதக் கோட்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளன. பன்னிரு இராசிகள் கொண்ட கோட்கள் சஞ்சரிக்கும் வான வீதியே பகோளம் என்ப.
ஐம்பூதக் கோள் நிலை.
|
வலம்
|
இடம்
|
|||
|
சிங்கம்
|
சூரியன்
|
|
கடகம்
|
சந்திரன்
|
|
கன்னி
|
புதன்
|
மண்
|
மிதுனம்
|
புதன்
|
|
துலாம்
|
சுக்கிரன்
|
நீர்
|
இடபம்
|
சுக்கிரன்
|
|
விருச்சிகம்
|
செவ்வாய்
|
தீ
|
மேடம்
|
செவ்வாய்
|
|
தனுசு
|
வியாழன்
|
காற்று
|
மீனம்
|
வியாழன்
|
|
மகரம்
|
சனி
|
வான்
|
கும்பம்
|
சனி
|
அண்ட பிண்ட விசாரத்தால் இவ்வுண்மைகள் நன்கு விளங்கும். இதனை உணர்த்தவே ‘அம்போருகத்தே யறி’ எனப்பட்டது. அதாவது, அம்போருகம் என்பது சிர நடு திகழ் ஆயிரமிதழ்த் தாமரை மலராம். இவ்விடத்தில் தெய்வ ஒளி விளங்குவதால் இங்கிருந்து விசாரத்தால் அறிய வேண்டும் என்பதாம்.
Write a comment