தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.
|
2. |
பேரண்டத் தாறாகப் பிண்டவுடல் தான்வளர ஓரண்ட னாளு முளத்து. |
482. |
குறள் விளக்கம்.
பேரண்டமாகிய இப்பிரபஞ்சம் ஐம்பூத சக்தி கொண்டது. அவ்வைம்பூத அணுக்களை சிறிதளவு பெயர்த்து எடுத்து தொகுத்து வளர்க்கப்பட்டதே நம் தூல தேகமாகிய பிண்டம். பிண்டம் என்றாலே பிள்ளப்பட்டது, பிரித்தெடுத்து ஆக்கப்பட்டது, அதாவது அண்டத்தில் இருந்து பெயர்த்து ஆக்கப்பட்டது என்றே பொருளாம்.
இப்பிண்டமாகிய உடலுள் ஆன்மாவிட்த்து இருந்து தேகாதி பிரபஞ்சத்தை எல்லாம் ஆள்கின்றார் நம் பதி. இப்பிண்டத்தில் தலை அண்டம் எனப்படும். நம் தலை நடு இருக்கும் தலைவர் அண்டன் எனப்படுவார். அன்றியும் அண்டன் என்பது அகண்டாண்ட பிரபஞ்சத்திற்கும் தலைவர் என்றும் பொருள்படும்.
இவ்வுண்மை எல்லாம் அறிந்து நம் உளத்துற்று இலங்கும் ஒப்பற்ற அண்டனாம் தலைவரை மறவாது சேர்ந்து கொண்டு தயாவொழுக்கம் மேற்கொண்டால் நல்லின்ப வாழ்வு சேரும். அருளடையாது ஜோதிடப் பற்றால் நல்வாழ்வு அமையாது.
ஓர் அண்டன் = ஒப்பற்ற கடவுள்.