தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.
|
1. |
அகமும் புறமும் அறிதற்கு ஆன்ம முகநின் றுசாவி முயல். |
481. |
குறள் விளக்கம்.
அக நிலையிலிருந்து ஆன்ம விசாரம் செய்கின்றபோது, அகத்தே அவ்வான்ம உண்மை விளங்குவதோடு புறத்துறும் அண்ட பிண்டங்களின் உண்மையும் தெளிந்து கொள்ளப்படுவதால் அவ்வதிகாரத்தின் பின் இவ்வதிகாரம் வந்துள்ளது.
ஆன்மாவினிடத்திருந்து அகமும், புறமும் அறிய முயற்சித்தால் ஆண்டவரே தயாவுணர்வோடு நமக்கு உண்மையை அறிவிப்பார்.
Write a comment