தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தெட்டாம் அதிகாரம்.
ஆன்ம விசாரம்.
|
10 |
உடலுரு நாமென் றுணருபொய்ப் பாவனைபோய் அடலான்மா நாமாத லாய்வு. |
480 |
குறள் விளக்கம்.
தேகத்தை நாமாக மதித்து உலகியல் வாழ்வில் அகங்கரித்து அல்லல்பட்டு அழிவுறுவது வாழ்வில் பெரும் தோல்வியாம். ஆன்மாவிற்கு நட்டமாம். இது “நாம் இத்தேகம்: என்ற பொய்ப்பாவனையால் ஏற்படுவதாம்.
இதனை விடுத்து, வன்மை மிக்க அல்லது அழியாமை உடைய ஆன்மாவே நாமாக உள்ள உண்மையை விசாரித்து அடைவதுதான் வெற்றி தரும் ஆன்ம விசாரம் என்பது. இதனால் உண்டாவது பெருவாழ்வும் ஆன்ம இன்ப இலாபமும் ஆகும்.
Write a comment