Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.478.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தெட்டாம் அதிகாரம்.

ஆன்ம விசாரம்.

8.

பொய்கொடுத்த நெஞ்சத்துப் பூத்த மனோபீடம்

மெய்யல்ல ஆன்மாவின் வீடு.

478

குறள் விளக்கம்.

இதயத் தானத்தில் ஜீவான்ம சக்தி மன அறிவுடன் கூடி விளங்குகிறது. ஆன்ம விசாரத்தால் தயவும் ஒருமையும் சேர்ந்த மனம் மணியாகி, புருவ மத்தியின் மனோன்மணியாகித் திகழும். இவ்விரு நிலைகளும் ஆன்மாவுக்கு வீடாகாது. அதாவது ஆன்மா விடுதலை பெற்று நித்தியமாய் வாழும் இடமாகாது.

இதயமும், லலாடமும், ஆன்மாவிற்கு அநித்திய தேகத்தில் ஏற்பட்ட தற்காலிக உறைவிடங்களே ஆகும். பரமான்ம நிலையமே இவ்வான்மாவுக்கு நித்தியானந்த வீடாகும்.