Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.477.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தெட்டாம் அதிகாரம்.

ஆன்ம விசாரம்.



7.

ஆன்மநிலை கண்டு அருளோ டதினின்று

தான்கெட் டனகம் தழை.

477

குறள் விளக்கம்.

ஆன்மாவை அடைதற்கு முதலில் அதன் இருப்பிடத்தையும் இயல்பையும் அறிய வேண்டும். அறிந்து, அங்கே மனத்தை இருத்தி அதன் இயல்பு நமது இயல்பாகும் வண்ணம் உண்ணின்று மலர்ந்து உணர்விலும், உடற்செயலிலும் அவ்வான்மத் தன்மையைத் தழைப்பித்தல் வேண்டும். இப்படி ஆன்மாவைச் சார்ந்து அதுவாகி வாழ்தலே ஆன்மா விசாரமாக இங்கு உரைக்கப்படுகிறதாம்.