தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தெட்டாம் அதிகாரம்.
ஆன்ம விசாரம்.
|
5. |
நான்பிரம மென்றுநகரா அடித்தரற்றும் ஊன்பிரமற் கில்லை யொளி. |
475 |
குறள் விளக்கம்.
ஊன் பிரமன் என்றது ஊனுடம்பே “தான்” என்னும் பற்றோடு அலையும் மோக மனிதனைக் குறிப்பதாம். இவ் உடம்பின் பற்று அறாது “நானே பிரம்மம்” என முழக்கி வேதாந்தம் பேசுகின்ற வாய் வேதாந்திகள் மெய்யொளியை அடைய மாட்டார்கள். முரசு கொட்டி முழக்கி அத்துவைத வேதாந்த ;பிரசங்கங்கள் செய்தாலும் அருளனுபவமும், உண்மை ஆன்ம விசாரமும் அடைவது அருமை. உடற்பற்று விடாதவரை, உள்ளொளிப்பற்று, உண்டாகாது.
ஒளி = புகழ், பெருமை, மெய்ஞ்ஞானம்.
Write a comment