Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.474.

தயவுக்குறள்



சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தெட்டாம் அதிகாரம்.



ஆன்ம விசாரம்.



4.

வேதநூ லாயும் விசாரத்தா லான்மநிலை

ஈதெனக் கண்டா ரெவர்.

474.

குறள் விளக்கம்.

ஆன்மானுபவமும், அதனாலுறும் கடவுட் சித்தியும் எப்பேர்ப்பட்ட வேதாமக் கலை ஞானத்தால் கூட, அடைந்து விட முடியாது. ஆதலால், பல காலம் வேதங்கலை பழுதற ஓதி அவற்றின் பொருளை நன்கு ஆராய்ந்து விரிந்து விளக்கம் கண்டாலும் என்ன நற்பயன் உண்டாகுமோ ? ஆன்ம விசாரப் பயன் அருள் உணர்வினால்தான் அகநின்று கண்டு கொள்ளப்படும்.