Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.469.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தியேழாம் அதிகாரம்.

அருள் விசாரம்.

9

சாருதல் வேண்டும் தயாவினை யுள்ளத்து

ஆருதல் வேண்டும் அருள்.

469

குறள் விளக்கம்.

புரிகின்ற செயல் எல்லாம் தயவுடையதாக இருக்க வேண்டும். அப்படி புறத்தே தயவுச் செயல் வெளிப்பட்டு இலங்கும் போது, உள்ளத்தில் அருள் அல்லது கடவுள் தயா உணர்வு நிரப்பப்படல் வேண்டும். இதுதான் அருள் விசாரம் என்பதன் மெய்ப்பொருள்.

அகத்தில் அருள் உணர்வு நிரம்பாத போது, தோற்றும் புறச் செயல், சுத்த தயவுச் செயல் ஆகாது. அது போல் புறத்தே தயவுச் செயல் காரியமுறாத போது, அகத்தே மெய் அருள் விளக்கம் உண்டாகாது. ஆதலின் அகமும், புறமும் ஒன்றுபட்டு இலங்கும் அனக விசாரமே கொள்ளத் தக்கதாம்.