தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தியேழாம் அதிகாரம்
அருள் விசாரம்.
|
7 |
அருளே வடிவாய் அருளே யுயிராய் ஒருவிசா ரத்தி லுணர் |
467 |
குறள் விளக்கம்.
சிறந்த இவ்விசாரத்தினால் உணரப்படுவது திருவருளின் இயல் உண்மையே ஆகும். அகம், புறம், முற்றும் அருள் ஒளி நிறைந்த அனுபவம் உண்டாகும்போது உடலும் உயிரும் கூட அருட் ஜோதி சக்தியால் தாங்கப்படுகின்றனவாய் விளங்கும். இதுவே,
‘ஒரு (ஒப்பற்ற) விசாரமாக’ அறிய வேண்டும். அருள் இல்லாத புலன் அறிவைப் பெருக்கும் பொய்யான விசாரமெல்லாம் பற்றத் தகுந்தன அல்ல.
Write a comment