Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.462.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

இரண்டாம் பிரிவு

விசார இயல்.

நாற்பத்தியேழாம் அதிகாரம்.

அருள் விசாரம்.

2

அருளொளி வீசும் அகநிலை நின்று

தெருளளித் தேற்றுந் திரு.

462

குறள் விளக்கம்.

திரு என்பது பொன், அழகு, லட்சுமி, கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்ப. நம் அருள் விசாரத்தில், இத் ‘திரு’ பரமான்ம உண்மையைக் குறிக்கின்றதாம். அதாவது திரு என்ற சொல், த்+இ, ர்+உ என்னும் எழுத்துக்களில் ‘த்’ தகராகாச அல்லது பரமாகாச வடிவம். இவ்வெழுத்தோடு, கலந்த ‘இ’ அருட்பிரணவ சக்தியாம். இவ்வுண்மை வெளிப்படுவது ஜோதி மயமாகிய துவாத சாந்த அக வெளியிலாம். இங்கு ‘ர்’ பன்னிரெண்டாவது மெய்யெழுத்தாம். ருத்ர பீஜமாய் கடவுட் ஜோதியாய், உகர உயிர் அருள் ஐந்தொழில் புரிந்து கொண்டுள்ளதே இத் ‘திரு’ வாம். இதனைக் கண்டடைந்தவர்கள் உலகம் போற்றும் அருட் செல்வர் ஆவர்.