Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.460.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

10

தன்மயத்தா லெங்குமென்றுந் தாந்தனித்து நின்றாளுந்

தன்மைகொளும் நங்கள் தயவு.

460

குறள் விளக்கம்.

சுத்த தயவாகிய நம் பதியின் அற்புதத் தன்மை யாதெனில், ஒன்றாகிய தானே, தயா சித்தி விளக்கத்திற்காக தனி ஒரு ஆன்மாவிற்கு தயானந்த வாழ்வு அருள்வதற்காக எல்லாவிடத்தும், எல்லாக் காலத்தும் இடையறாது இருந்து தயவு ஆட்சி புரிகின்றதாம்.

ஆதலால், தன் அகத்தே விளங்கும் தயா ஜோதி பதியைக் கண்டு அதுவாகிப் பிரிவற்று, உலகெல்லாம் தன் மயமான ஒளி வீசிக்கொண்டு இன்பு செய்து இருத்தலே சுத்த சன்மார்க்கியின் வாழ்வாகும்.

முதற் பிரிவாகிய ஒழுக்க இயல்

1. இந்திரிய ஒழுக்கம்

2. கரண ஒழுக்கம்

3. சீவ ஒழுக்கம்

4. ஆன்ம ஒழுக்கம்

ஆகிய நான்கு உட்பிரிவுகளுடன் 46 அதிகாரங்கள் குறிப்பு விளக்கத்துடன் நிறைவுற்றது.