Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.459.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

9

எப்பா லவரு மெனதுருவே காணென்று

செப்பற நின்றானுட் சேர்ந்து.

459

குறள் விளக்கம்.

‘எவ்வுலகத்து எவ்வெவரும் எனது உருவமே என்பதைக் கண்டு கொள்ளுக’ என்று சொல்லாமல் திருவருளால் உணர்த்திக் கொண்டு நமது ஆன்மாவில் இரண்டற நிற்கின்றார் நம் பதி.

ஆண்டவர் உண்மை வடிவம் நம்மோடு கலந்து நின்று அனுபவம் அருளிக் கொண்டுள்ளது. இவ்வனுபவ நிலையில் பிறழாது, சூழும் ஆன்மாக்களில் எல்லாம் பதி சாயையாம் நிழலுருக் கண்டு அன்பு இன்பம் புரிதல் நம் கடமை.