Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.456.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

6

ஐவண்ணச் சோதி யருளாற் பிரபஞ்சம்

செய்வண்ணங் கண்டு தெளி.

456

குறள் விளக்கம்.

ஒன்றான கடவுட் சோதியே அகண்டமாய் நிறைந்துள்ளது. அது, ஐந்து தன்மை கொண்ட இயலொடு, செயலொடு, ஐம்பூதத்தால் ஆகிய மகா பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து இயக்கிக் கொண்டுள்ளதாம். ஆதலின், ஐவண்ணச் சோதியாம் அருட் பேரொளியே எப்பொருட்கும், எவ்வுயிர்க்கும் ஆதாரமாய், தன்மயமாய் உள்ளதென்று தெளிந்து கொள்ளல் வேண்டும்.

ஐவண்ணக் கலவை பேதத்தால் அனந்த வண்ணம் தோற்றுவிக்கப்படல் போல், இப்பிரபஞ்சமும் அனந்த வண்ணத்தோடு படைக்கப்பட்டுள்ளதாம். எல்லாம் அருள் வண்ணமாய் அதுவே தன்மயமாய்க் கண்டு நிற்பர், அருளுடையார்.