Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.455

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்



5

ஒன்றான ஈசன் உலைவற் றொளிசெய்து

நின்றானே தன்மயமாய் நீண்டு.

455

குறள் விளக்கம்.

ஏக பரம்பொருளாய் உள்ள இறை அருட்பெருஞ் சோதி தானே யாவற்றுள்ளும் நிலைத்து, எங்கும், என்றும் தன் மயத்தையே காட்டி நிற்பதாம். இந்நிலையைக் கண்டு கொள்ளுவதற்கு, இந்திரிய, கரண, சீவ நிலையாகிய முப்பகுதிகளைக் கடந்து நான்காவதாகிய ஆன்ம பீடத்தில் அருள் ஞான உணர்வோடு நிற்றல் வேண்டும். அப்பொழுதுதான் ஆன்மானுபவத் தற்சோதிக் காட்சி நிறைந்து விளங்கும்.