தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
6 |
பகரமெய்ச் சோதி பதிஅகரத் தோடு உகரமுறு நெற்றிக்கண் ணொன்று. |
446 |
குறள் விளக்கம்.
உள்ளிருக்கும் அழகிய கடவுட் சோதியே, பகர மெய்ச் சோதியாம். இதனோடு அகர உகரங்கள் சேர்ந்து ஆன்மச் சுடராக அகத்து இலங்குகின்றதாம். இச்சுடரின் பிரதிபிம்பமே புருவநடு நெற்றிக் கண்ணாய் விளங்குவது.
இந்த நெற்றிக் கண்ணை உபநயனம் என்றது. பூரண விளக்கத்தின் பொருட்டே. யாதெனில்,, உபநயனத்தை, எழுத்து முறையில் சோதித்துப் பார்க்கில், ‘உ+ப்+அ’ நயனம் எனக் காணலாம். இதில், நம் சிரநடு பகர ;பீடத்திலங்கும் கட்வுட் சோதி உகர அகரத்தால் சூழப்பட்டுள்ள உண்மையையும் புலப்படுத்திக் கொண்டு இருப்பது காணலாம். இதனால், இந்த ‘உப’ என்ற உறுப்பின் உயர்வும், சிறப்பும், தெய்வ வடிவத் தன்மையும் நன்கறியலாம். மற்ற வகையில் பொருள் காண்பதும், வடமொழி உபசர்க்கமாகக் கொண்டு உரை செய்வதௌம் உண்மை விளக்கமற்றவையாம்.
பகரம் – ‘ப’ என்ற எழுத்து, இதற்குப் பொருள் அழகு என்றும், பிரதி என்றும் உள்ளன. இந்தப் பகர வடிவம், நம் சிரநடு ஆன்ம பீடமாம். பகர மெய்யின் புள்ளியே, ஆன்ம பீடத்தில் இருக்கும் கடவுட் சோதியைக் குறிப்பது. இதுவே கடவுளின் அகரமாகிய பரமாகாச சொரூபமும், உகர ஐந்தொழில் ஆற்றலும் கொண்ட கடவுட் சுடர், உண்மை உபநயனம் இதுவாகும். இதன் பிரதியே புருவ நடு பொலிவது. நயனம் = கண்.