Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.445

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

5

பிரமமுடி நெஞ்சிற் பிறழா திருத்திச்

சிரமலர்மெய்க் கண்ணேற்றிச் சேரு.

445

குறள் விளக்கம்.

பிரமமுடி = 1. கடவுள் தத்துவம்

2. முப்புரி நூலில் இடப்படும் மந்திர பூர்வமான முடிச்சு.

இவ்விருவகைக் கருத்தமைத்து இரு விளக்கம் பெறலாகும். ஒன்று, கடவுள் தத்துவத்தை நன்கு ஆய்ந்து, அறிந்து உள்ளத்தில் இருத்த்டிக்கொண்டு, மெய்ஞ்ஞானமாகிய தயா அறிவால் அக்கடவுள் தத்துவத்தோடு சேர்ந்து கலந்து ஒன்றுபடல் வேண்டும் என்றது.

இரண்டாவதாக, பூணூல் அணிபவர்கள் அதிலுள்ள பிரம்ம முடியானது இருதயத் தானத்தில் பட தரித்திருப்பதும், சந்தியாவந்தன தியானத்தின் போது இப்பிரம்ம முடியைக் கொண்டு புருவ மத்தியைத் தீண்டி, உபநயன விழிப்புற்று, பிரம்மோபதேசப் பொருளை அடைவதாக பாவனை செய்யப்படும். பொருளுணர்ந்து செய்வோர்க்கும் இப்பிரம்ம பாவனை பொய்த்துப் போகின்றதால் சுத்த தயா சன்மார்க்கம் மேற்கொண்டு தான் கடவுள் அனுபவம் பெற முடியும் என்று அறியலாகும்.