தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
3 |
நயனத் திடைநின்று ஞானச் சுடரைப் பயனுறப் போற்றிப் பணி. |
443 |
குறள் விளக்கம்.
தயா ஞான சோதித் தீபம் சிரநடு சிற்றம்பலத்தே ஒளிவிட்டு இலங்குகின்றது. இதனை அறிந்து அடைய, இரு கண்ணுக்கு இடையிலுள்ள லலாடத்தில் ஒருமையுடன் இருந்து உள்நோக்கிப் பாவித்துச் சிரநடு உணர்ந்து உணர்ந்து போற்றிப் பணிதல் வேண்டும். இப்படிப் பணிவதால், “தான்” என்ற போத நாசம் உண்டாகும். அப்போது அவ்வொளியே தானாகி நிற்கலாம்.
இப்படி, அந்த ஞான தீபமயமாகி நின்று தேகப் பற்றற்று தயானந்தம் வளர் செயல் புரிந்து கொண்டு வாழ்வதே இவ்வுப நயனத்தால் பெறும் பெரும் பயனாகும்.
Write a comment