தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தி நான்காம் அதிகாரம்.
பிறவித் தொடர்.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
1 |
உபய நயனத் தொளிரு நடுவொன்(று) அபயம் அருட்கண் ணது. |
441 |
குறள் விளக்கம்.
பிறவித் தொடரை நீக்கிக் கொண்டு, நிலையான வடிவில் நிலைத்து நின்றொளிர, தேகப்பற்றறவும், ஆன்மப் பற்று உண்டாகவும் வேண்டியுள்ளது. இதற்கு, முதலில் இவ்வுப நயனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியதால் இவ்வதிகாரம் ஈண்டு இணைகின்றதாம். உபநயனம் என்றது நெற்றிக் கண், ஞானக்கண், ஆன்மக்கண் என்பர். இது உபயம் (இரண்டு) ஆகிய வலது, இடது கண்களுக்கு இடையில் வெளிப்பட உள்ளதால் மூன்றாம் கண் என்றும் மொழியப்படும். நாம் பெற்றுள்ள புறக்கட் புலனால் புற உலகக் காட்சியைக் காணலாகும். இக்கண்ணால் காணும் காட்சிப் புலனின்பம், மனத்தில் பதிந்து நின்று நினைவில் வெளிப்படும் தோறும் மனோ வெளியிலும் தோன்றி மறையும். இக்கண்ணால் காண்டற்கரிய அக ஆன்ம உண்மையையும், அருட் செயல் உண்மையையும் காணச் செய்வது புருவ மத்திய ஞான உணர்ச்சிக்கண் என்னும் உபநயனம். இக்கண்ணே மனிதனுக்கு அபயமளித்து ஆனந்தம் அருள்வதாம்
.