Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.440

தயவுக்குறள்



சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி நான்காம் அதிகாரம்.



பிறவித் தொடர்.



10

ஆனந்தத் தாண்டவமீ தான்மாவில் நம்பதிநின்(று)

ஈனந்த விர்க்கவுளா ரீண்டு.

440





குறள் விளக்கம்.



ஆன்மாவின் கண் நம்பதி ஒன்றி நின்று அவ்வான்மாவின் இழிநிலை நீக்கி முடிவில் இன்ப நிலை சேர்க்கவே இசைந்துள்ளார். இப்படி அக நின்று அருளலின் காரணமாகப் புறத்தே தொடர் பிறவிகள் என்னும் தொடர்ந்த திருநடனம் நிகழ்ந்து கொண்டே உள்ளதாம்.



இந்தத் திருநடனம் ஆன்மாவுக்கு திருவருளோடு வெளிப்படுத்தப்படும் போதுதான், அவ்வான்ம நித்தியானந்த அனுபவமும் அடைய உள்ளது. இவ்வானந்த அனுபவமுற்ற ஆன்மாவுக்கே ஈனமான பிறவித் தொடர் நீங்கி சுத்த வடிவம் என்றும் நின்று நிலவுவதாம்.