Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.438

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி நான்காம் அதிகாரம்.

பிறவித் தொடர்.

8

சூனியமா யான்மாவிற் சுட்டற் றறவொழிந்து

போனவர்க்கு மில்லை புகல்.

438

குறள் விளக்கம்.

தவ நிட்டையால், ஆன்ம அணுவில் நிர்விகற்ப சமாதியாய் ஒடுங்கி அடங்கி முற்றும் சூன்யமாய் முடிந்தவர்களுக்கும், அழிவற்ற பேரின்பானுபவம் இல்லையாம். ஏனெனில், ஆன்மானுபவத்தோடு சகச நிலையில் கடவுஅள் தயவு கொண்டு வாழ வேண்டுவதே மனிதனுக்கு புகலும், புகழுமாம்.



சூனியமாய் மறைந்து போன ஆன்மாக்களும் ஒரு கால எல்லைக்குப்பின் கடவுள் தயவால், தயானந்த அனுபவ நிலைக்கேற மறுபடியும் மனிதப்பிறப்பு எடுக்கும். இதனால், அந்த சூனியம் உற்றிருந்த ஆன்மாக்கள் பிறவித் தொடர் முற்றும் ஒழிந்தவை அல்லவென்றும் சிறிது காலம் மறைபட்டு கிடந்ததே என்றும், பின்னர் வெளிப்படுகின்றன என்றும் அறியலாகும்.