Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.435

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி நான்காம் அதிகாரம்.

பிறவித் தொடர்.

5

பொன்றும்வினையுடம்பின் பொய்சேர் பிறப்பிறப்பை

மன்றிருந்தோர் வாழ்த்தார் மதித்து.

435

குறள் விளக்கம்.

தோன்றுவதும் அழிவதுமாய் உள்ள இக்கர்ம தேக வாழ்வை, விருப்பால் பற்றிக் கொண்டும், வெறுப்பால் துறந்து நின்றும் கலங்குவரோ சிற்றம்பலத்தே வாழ்பவர்கள் ?

இவ்வருளம்பலவாணர்கள் அருளையே மதித்து வாழ்வார்களே அன்றி, தூல தேக வாழ்க்கை வரலாற்றை வீணில் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். தொடர் பிறவியின் தொல்லை ஒழித்து, தயவுச் சுடர் வடிவில் துவங்க விழைவோர், வினை உடம்பின் புறநிலையைக் கண்டு போற்றி மகிழார்.