Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.430.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.

தயாநியதி



தயவுக்குறள்

10

பதிதயவா னன்றிப் படரும் விதியை

மதியதனால் வெல்ல வரா.

430

குறள் விளக்கம்.

கடவுள் ஏற்படுத்தி இருக்கின்ற விதிச்சட்டம் மனிதனுக்கு பேரின்ப முடிவை வழங்குவதற்காகவேயாம். இவ்விதி எந்த விதத்திலும் மனிதனின் கீழ்த்தர இயல்புகளையும் குறைகளையும் ஒழித்து முடிவில் தனது லட்சியத்தை கொடுப்பது சத்தியம். அதனால், சூழ்கின்ற விதியை வெல்ல நினைப்பதும், கடுமையாக முயற்சி செய்வதும் மூடம்.

பெரு முயற்சியால் விதியை சற்று மாற்றினாலும், அத்தோடு நின்றுவிடாது தன் லட்சிய எல்லையை நோக்கி சென்று கொண்டேதான் இருக்கும். எனவே மதியுடைய மனிதனால் விதியை ஓரளவு மாற்றினாலும் பூரணமாக வென்று அடிமைப்படுத்திக் கொண்டு தன் இச்சைபோல் வாழமுடியாது. கடவுள் நியதியே முடிவில் வாகை சூடுவது. மதிமனிதன் அகங்கார முயற்சி தோல்வியுற்று, கடவுளுக்கு ஆட்பட்டு அவர் தயவில் வாழ்வதே அமையும்.