Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.428.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.

தயாநியதி

8

மூவினையான் மூவா முளைத்துவள ரிப்பிறவி

தேவிதயா சத்திச் செயல்.

428

குறள் விளக்கம்.

ஆன்மாவுக்கு பிறவிகள் மேன்மேலும் தொடர வகுக்கப்பட்டுள்ள கடவுள் நியதியாகிய திரிவினை, தயா பெருஞ்சக்தியின் தனிப்பெருஞ் செயலேயாகும். கடவுளும் அவர்தம் தயாசக்தியும் நித்தியமாதலின், அக்கடவுள் நியதியால் விளைகின்ற பிறப்பிறப்பும் மூவாமை (அதாவது அழிந்து ஒழியாத தன்மை) கொண்டு தோன்றி விளங்கியும், தோன்றாது மறைந்து இருந்தும் வளர்ந்து கொண்டே உள்ளதாம்

.