தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.
தயாநியதி
|
7 |
ஆழ்மயன்று மாற்றி அடைகின்ற வெற்றியின் ஊழ்முறிந்து போமோ ஒருங்கு. |
427 |
குறள் விளக்கம்.
மிகப் பாடுபட்டு ஊழ்வினையை ஓரளவு மாற்றி அதனால் அடைகின்ற சிறிது இன்பத்தால் என்ன பயன் ? அப்படிஒரு வழியில் மறுக்கப்பட்ட ஊழ் பிரிதொரு வழியில் மாறி வந்து தன் காரியத்தை முடித்துக் கொள்ளுகின்றது. இதனால் அவ்வூழ் முற்றும் ஒழிக்கப்படுவதில்லை.
தயா நியதியால் வந்த ஊழ், உயர் அனுபவத்தை வழங்கவே வந்ததாம். அதனை மறுத்துத் தாழ்வுறுவதிலும் அதனை பொருட்படுதாது தயா நன்முயற்சியோடு வாழ்ந்தால் நல்லின்பம் உண்டாகும். ஊழும் வாழ்வில் நல் ஏவல் செய்து நிற்கும்
.
இந்த தயவு குறள் மூலம் வெளிபடுத்துகிறார்.எதனை பற்றியும் அதிகமான இன்பமோ,துன்பமோ கொள்ளாமல்
அவைகள் நம்மை அக உண்மை மெய் ஞான தயவு வழிக்கு கொண்டு செல்வதற்கே என்பதை உணர்ந்து
நாம் வாழும் வாழ்வை தயவை கொண்டு நமக்கு கிடைத்து இருக்கும் வாழ்வில் வாழ வேண்டும்.
ஒருவர் வாழ்வை வெளி பார்வையில் பார்த்து அவர் வாழ்வு உயர்ந்தது என எண்ணி கொள்ளுகிறோம்.
நம் ஒவ்வொருவரின் உயர்வு நாம் எப்படி தயவு வாழ்வு வாழ்கிறோம் என்பதில் இருக்கிறது.