Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.423.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.

தயாநியதி

3

இறவாப் பெருநிலைக்கே யேற்றிநமை யாள

அறவாளன் கண்டதிவ் வாறு.

423

குறள் விளக்கம்.

அறவாழி பெருங்கடவுள் விதிக்கின்ற இத்தயா நியதி முறையால் நம்மை பேரின்ப நிலைக்கு ஏற்றுகின்றார். அந்நிலைக்

கண்ணுற்று, அப்பதியோடு இரண்டற நின்று நித்தியமாய் வாழ்வதுவே நம் குறிக்கோளாகும்.

இவ் அற ஆணையின் வழி உணராது, மனம் போன அவா வழி நடப்பதால் மனிதன் துன்பம் மிக அடைந்து, குறைபட்டு, விதியை நொந்து மாய்கின்றான்.

உண்மை நெறியோர்ந்து ஒழுகின். பதி அருள் நியதியின் குறை ஒன்றும் காணாது நிறைவு கண்டு ஆனந்தம் உறலாகும்.