Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.422.

தயவுக்குறள்



சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்

தயாநியதி

.



2

விதியை மறுத்துப்பின் வேறொன்றை நச்சின்

அதினுறுமோ பேரின் பருள்.

422

குறள் விளக்கம்.


உலக வாழ்வில் ஒரு சில அனுபவம் அடைந்து தேறி தெய்வ நிலைக்கு ஏறவே தயாநியதியால் யாவும் விதிக்கப்படுகின்றன.


இவ்வுண்மையை அறியாது, அவ்விதியால் நிகழ்கின்ற வாழ்வில், புலனின்ப அவாவினால் சிலவற்றை மறுப்பதும், சிலவற்றை மிக விரும்பி முயன்று அடைவதும் ஆகியவற்றால் பேரின்ப வாழ்வு எய்திடலாகுமோ ?

ஆகாது.


விருப்பு வெறுப்பின்றி தயா நியதியோடு ஒத்து உலகில் தயா செயல் புரிந்து கொண்டு வாழ்ந்தால் பெருநலம் உண்டாகும்


.