தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.
தயாநியதி
|
1 |
அறநெறி செய்தான் அருளாளன் ஆன்மப் புறவாழ் வுறுமதன் போக்கு. |
421 |
குறள் விளக்கம்.
முன்னதிகாரத்தில் உரைக்கப்பட்ட வினையுடம்பு, கடவுளின் திருவருள் ஈன்றதாகவே கண்டோம். அத்திருவருள் தாய் நியதியாக, இயற்கைச் சட்டமாக கடவுளால் விதிக்கப்படுவதாம். இதற்குத்தக இம்மகா பிரபஞ்சத்தில் அணு முதல் அண்டம் ஈறாக யாவும் தோன்றி விளங்கி, மறைந்து கொண்டுள்ளன. ஆகையால், வினையுடம்புக்கு ஆதாரமாகிய கடவுள் நியதியை இவ்வதிகாரத்தில் கொண்டு உரைக்கப்பட்டுள்ளதாம்.
கடவுள் நியதி, தயா நியதியாக, அற நெறியாக உள்ளதாம். அருட்ப்ரும் கடவுள் தம் அருள் நியதியால்தான், ஆன்மாக்களுக்கு வேண்டிய ஜீவ தேகாதி வாழ்வுக்கு வழி வகை செய்து வழங்கி வாழ்வித்துக் கொண்டுள்ளார்.
Write a comment