Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.413.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.

வினையுடம்பு

.

3.

அவனருளே ஆன்மாவுக்(கு) ஆம்மூ வினையாய்ப்

.பவமருளிச் சேர்க்கும் பதி.

413

குறள் விளக்கம்.,

கடவுள் அருளாகிய தயவே ஆன்மாவுக்குள் இருந்து வெளிப்படுகின்ற போது, வினையுடம்பு சூழ்கின்றது. கல்லிலும், மண்ணிலும், மற்ற பூதங்களிலும் மறைந்து கிடக்கும் ஆன்ம சிற்றணுவினின்று அருட்சக்தி வெளிப்பட, அறிவு விளக்கம் பெறத்தக்க தேகம் வழங்கப்படுகின்றது.

ஆன்மாவுக்கு மூவினை என்பன “பிராரப்தம், ஆகாமியம், சஞ்சிதமாம்”. ஒரு பிறப்புக்கு முன் செய்த வினை – பிராரப்தம் காரணமாம். நிகழ் பிறப்பில் அனுபவிப்பது – ஆகாமிய வினை. இதில் எஞ்சி நின்று அடுத்த பிறப்புக்கு காரணமாவது – சஞ்சித வினையாம்.

இவையெல்லாம் திருவருள் உண்மையை உணரும்போது அத்திருவருளே ஆன்மாவுக்கு மூவா (அழியா) மூவினையாய் வந்து வந்து உள்ளொளி யூட்டி வளர்த்து பதிநிலைக்கு ஏற்றுகின்றதாம்.