தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்திரண்டாம் அதிகாரம்.
வினையுடம்பு
|
2. |
அவனன்றி யோரணுவு மாகா ததனால் .இவனார் வினையே திவண். |
412 |
குறள் விளக்கம்.
‘அவனன்றி அணுவும் அசையாது என்பது பழமொழி. ‘அவனின்றி ஓர் அணுவும் ஆகாது’ என்பது, இன்றைய மொழி. பரமான்மா இல்லையேல், சீவான்ம சிற்றணுவும், ஐம்பூத சூக்கும அணுவும் தோன்றவே முடியாது.