Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.409.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தோராம் அதிகாரம்

மனித சீவான்மா.

9.

தொல்லை யிரும்பிறவிச் சூழலேலாந் தீர்ந்தருளால்

எல்லையி லின்புறுவோ மீண்டு.

409

குறள் விளக்கம்.

இம்மனித ஆன்மாவே பண்டே தொட்டு சூழ்ந்து கொண்டே உள்ள பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரையேறி, பெருமகிழ்வு நிறை இன்ப வாழ்வு பெறவே உற்ற தருணம் இதுவாகும்.

சுத்த தயா நெறி ஒன்றினாலே, அல்லல் நிறைந்த தொல்லைப் பெரும் பிறவித் துன்பம் எல்லாம் தீர்ந்து சுகம் அடையலாகும். இவ்வின்ப நிலை பெற, இப்பிறப்பில், இவ்வுலக வாழ்வே பொருத்தமானது. அந்நிலை எய்திடாது போவோர் தவறினவர்கள் ஆவர்.