Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.407

தயவுக்குறள்



சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தோராம் அதிகாரம

மனித சீவான்மா.

7.

முக்காலுங் காலும் முழுமதியின் வெண்பொனொளிர்

.முக்கண்டு ஆன்மா முகத்து.

407.

குறள் விளக்கம்.

இந்த சீவான்மாவின் ஒளி வடிவம், நெற்றி நடு இடமாகிய லலாடத்தின் கண்ணே, பூரண சந்திரப் பிரகாசத்துடன் விளங்குவதாம். இம்முழுமதி ஒளியில் முக்கால் பங்கு வெண்ணிறமும், கால் பங்கு பொன் வண்ணமும் ஒன்று கலந்து திகழ்கின்றதாம். இவ்வண்ணம். நமது அகப்பெரும் பதியின் பொன் வண்ணத் திருமேனியும், வெள்ளொளி வண்ணத் திருவருட் சக்தியையும் உணர்த்தி நிற்பனவாம்.

அகத்தில் விளங்கும் பரம பதியின் உண்மையை உணர்த்த நடுக்கண் ஒளிர் முகத்தின் இடத்தே தோற்றுவது இவ்வான்ம வடிவம். பரமான்மாவின் உண்மையை விளக்க வந்த ஆன்ம சோதித் தத்துவம் கொண்டு நம் சன்maaர்க்கக் கொடியும், கீழ் முக்கால் பங்கு வெண்மையும், மேல் கால் பங்கு பொன்மையும் கொண்டு பொலிவிக்கப்பட்டுள்ளதாம்.

கற்பனா ஆலயங்களில், அகத்திருக்கும் தெய்வ சக்தி தத்துவம் குறிக்கும் கொடியே புறத்தில் கட்டப்படும். இவையன்றி, அரசு, நாடு, இனம், இயக்கம் முதலானவை குறிக்கவும் அகக் கோட்பாட்டிற்கு ஒப்ப புறக் கொடிகள் ஆக்கிக் கொள்ளப்படும்.