தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தோராம் அதிகாரம்
மனித சீவான்மா.
|
6. |
சீவ வுருவுற்ற சீவான்ம ஆலயத்தே தேவபர மான்மாவைத் தேறு. |
406. |
குறள் விளக்கம்.
ஆன்ம அணுவினின்று சீவசக்தி ஒளிவிட்டு மிளிரும்போது அது சீவான்மா என விளங்குகின்றது. சீவ தேக வடிவில்தான் இச்சீவான்மா வெளிப்படும். இந்நிலையில் காணும் சீவான்மாவே உண்மை ஆலயமாக உள்ளது. இந்த ஆலயத்தில்தான் பரமான்மாவாகிய கடவுள் தனித்திருந்து பெருங்கருணை ஆட்சி புரிகின்றார்.
இதனை உள்ளவாறு தெளிந்து தேறி ஜீவகாருண்யப் பணி புரிதலே கடவுளைப் பணிதல் என தெளிதல் வேண்டும்.
Write a comment