தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.
|
9.
|
பரமான்மா ஆண்பெண் பசுவொன்றே யாகும்
.அரனுமையு மாமொருவ ராங்கு.
|
399
|
குறள் விளக்கம்.
பசு என்ற சொல்லால் கறவை மாடாகிய ஒன்றையே சாதாரணமாகக் குறிப்பர். ஆனால் அதன் ஆணினமாகிய காளை மாட்டையும் கூட பசு என்று குறிப்பது நம் தமிழ் மரபு. ஆன்மாவும் பசு எனப்படும்.
நமது பரமான்மாவோடு இரண்டற்று உல்ளது. ஆன்ம சிற்றணுப் பசு. ஆதலின், அத்துவித வடிவமான இந்த ஆன்மப் பசு, ஆணாகிய பரன் கூறும், பெண்ணாகிய சீவன் கூறும் கொண்டது என்பர். இவ்வாதாரத்தின் மேல் கற்பிக்கப்பட்டவை.
1. ஆவிடை ‘இது கடவுட் குறி ஆகிய இலிங்கம் விளங்கும் இடம். இது, ஆ=பசு, விடை = எருது. சீவான்ம பரமான்மக் கலப்பு உண்மையைத் தெரிவிப்பது.
2. உமையொரு பாகனின் வடிவம் – இதில் இடது புறம் உமாதேவியும், வலது புறம் பெருமான் உருவும் விளங்கும். இதுவும், சீவான்ம பரமான்ம பிரிவற்று விளங்கும் நிலையை உணர்த்தும். இவ்வடிவத்தை கருத்தில் வைத்துக் கொண்டு, கடவுளை ஒருவன், ஒருத்தி என்னாது, ‘ஒருவர்’ என்ற பொதுச் சொல்லை, சிறப்பு வகையால் பிறப்பித்துக் கொண்டனர் ஆன்றோர்.
கடவுள் என்பது ஆணாகவோ, பெண்ணாகவோ இல்லாது இருபாலும் ஒன்றியதும் அதீதமானதும் கூடலாம். இந்தக் கடவுள் என்ற சொல்லும். ‘கட(ம்)’, ஆன்ம சிற்றணுப் புற நிலையையும், உள், ஆன்மாணுவின் உள்ளிருக்கும் பரத்தையும் குறிப்பதால் கடவுள் என்பதும், சீவான்ம பரமான்ம ஐக்கிய வடிவையே சுட்டுகின்றதென்க. பொதுவாகக் கடவுள் என்பது பரமான்ம நிலையாகிய ஆண் தன்மையையே ஏற்றதால், கடவுளை ஆணாகக் கூறுதல் மரபாயிற்று.
Write a comment