தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.
|
7.
|
உடலன்றி ஆன்மாவை யொண்ணா துணர
.கெடலின்றி யுட்பெருகுங் கேழ்.
|
397
|
குறள் விளக்கம்.
ஆன்மாவின் உண்மை அறிதற்கு இவ்வுயர் அறிவுடைய மனித தேகம் வேண்டும். மற்ற எந்தப் பிறப்பிலும் ஆன்ம நிலையை அறிய இயலாது. இவ்வான்ம ஞானம் உண்டாகக் காரணமானது உள் வளர் ஒப்பற்ற பரமான்ம சோதியேயாம்.
நித்தியமாக அகத்திலிருந்து வளருகின்ற கேழாம் பரஞ்சோதியை அறிவதற்கு பக்குவ மனிதப் பிறப்புரு வேண்டியுள்ளது.ஆதலின், அவ்வொளி பெறும் வரை உடம்பைக் காத்து நிற்றல் வேண்டும்.
Write a comment